என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அனைத்து கட்சி கூட்டம்"
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் நடிகர் சரத்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பொது மக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண பொருட்களை வழங்கினார்.
புதுக்கோட்டை பகுதியில் ஆய்வு செய்தபோது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கஜா புயல் தாக்கத்தால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேரில் வந்து பார்த்த போது உண்மையான சேத விபரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு பல்வேறு நிவாரண பணிகள் செய்து வருகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்று ஆய்வறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது. அதன் உண்மை நிலையை தெரிந்து கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். அந்த ஆய்வு அறிக்கையை மீண்டும் ஒரு ஆய்வு நடத்தி அதில் என்னென்ன கூறப்பட்டு உள்ளது. அதை மூடுவதற்கு என்னென்ன செய்யலாம் என தமிழக அரசு முடிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #MekedatuDam #Sarathkumar #AllpartyMeeting
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா மாநில அரசு ஏற்கனவே கிருஷ்ணசாகர் அணையைக் கட்டியுள்ளது.
தற்போது காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது எனும் பகுதியில் மேலும் ஒரு அணை கட்ட கர்நாடக மாநில அரசு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக சுமார் ரூ.5200 கோடியில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
மேகதாதுவில் கடந்த 5 ஆண்டுகளாக அணை கட்டும் முயற்சியை கர்நாடகா மாநில அரசு மேற்கொண்டது. தமிழகத்தின் கடும் எதிர்ப்பு காரணமாக அந்த திட்டத்தை தொடங்க முடியாமல் கர்நாடக அரசு இருந்து வந்தது.
இந்த நிலையில் மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு திடீரென ஒப்புதல் அளித்துள்ளது. இது தமிழக மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசு தனது அனுமதியை திரும்பப்பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் இதை வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக விவசாயத்திற்கும், மக்களின் குடிநீர்த் தேவைக்கும் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக மாநிலத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு அனுமதி வழங்கியுள்ளது குறித்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 29-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ‘அனைத்துக் கட்சிக் கூட்டம்’ நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMK #MKStalin #Mekedatudam #AllPartyMeet
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு 2 மாதங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. எனினும் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்துவதில் மாநில அரசு தீவிரமாக உள்ளது.
அதேநேரம் இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் சார்பில் மறு ஆய்வு மனுக்களும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த மனுக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே, ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த மாதம் 17-ந் தேதி அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டபோது கோவிலுக்குள் நுழைய முயன்ற 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நிலக்கல் மற்றும் பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதேபோல் கடந்த 5-ந் தேதி மாலை முதல் மறுநாள் மாலை வரை கோவில் நடை திறக்கப்பட்டபோதும் போராட்டங்கள் வெடித்தன.
இந்த நிலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகியவற்றுக்காக அய்யப்பன் கோவில் நடை மீண்டும் வருகிற 17-ந் தேதி திறக்கப்படுகிறது. 2 மாதங்கள் வரை நடை திறக்கப்பட்டு இருக்கும். எனவே, மீண்டும் இந்த விவகாரம் விசுவரூபம் எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அனைத்து கட்சிகள் கூட்டத்தை கூட்ட கேரள அரசு திட்டமிட்டு இருக்கிறது.
இதுபற்றி தேவசம் மந்திரி சுரேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், “சபரிமலை தொடர்பான பல்வேறு விஷயங்கள் பற்றி பேசுவதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது பற்றி யோசித்து வருகிறோம். எனினும் இது தொடர்பாக இறுதி முடிவு எதையும் எடுக்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டு விசாரணையில் வெளியாகும் முடிவின் அடிப்படையில் இதுகுறித்து முடிவு செய்யப்படும்” என்றார்.
தலைமை தேர்தல் கமிஷன் சார்பில் டெல்லியில் இன்று அனைத்து கட்சிகளும் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
7 தேசியக் கட்சிகள், 51 மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
தேர்தலில் பெண்களை அதிக அளவில் பங்கு பெறச்செய்வது பற்றி கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது தேர்தல் ஆணையர்கள் கூறுகையில், ‘‘அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட அதிக பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்’’ என்றனர்.
இதையடுத்து வேட்பாளர்கள் செலவை குறைப்பது பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தேர்தலின் போது அரசியல் கட்சிகள் செய்யும் செலவுகளுக்கு உச்சவரம்பு நிர்ணயம் செய்யலாமா என்றும் கூட்டத்தில் கருத்து கேட்கப்பட்டது.
அப்போது தேர்தல் ஆணைய அதிகாரிகள் குறுக்கிட்டு தே.மு.தி.க. பிரதிநிதி ஜி.எஸ்.மணிக்கு கண்டனம் தெரிவித்தனர். அனைத்துக் கட்சிகளும் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டத்தில் தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டை சுமத்தக் கூடாது என்று அறிவுறுத்தினார்கள்.
இதைத் தொடர்ந்து ஓட்டுப்பதிவு எந்திரம் தொடர்பான சர்ச்சை பற்றி விவாதிக்கப்பட்டது. அதன் மீதான விவாதத்தில் தி.மு.க. பிரதிநிதி டி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு பேசுகையில், ‘‘ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பான வகையில் இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதிபடுத்த வேண்டும்’’ என்று கூறினார்.
காங்கிரஸ் சார்பில், ‘‘மின்னணு எந்திரத்தை கைவிட்டு விட்டு, மீண்டும் ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த வேண்டும்’’ என்று கோரிக்கை விடப்பட்டது.
மதியம் உணவுக்காக சற்று நேரம் இடைவேளை விடப்பட்டது. அப்போது வெளியில் வந்த தம்பிதுரை எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
வாக்காளர் பட்டியலில் யார் பெயரும் விடுபட்டு விடக்கூடாது. அதற்கு ஏற்ப அனைத்து வாக்காளர்களையும் கொண்ட பட்டியல் தயாரிக்கும்படி கூட்டத்தில் வலியுறுத்தினோம்.
ஒரே நபரின் பெயர் பல இடங்களில் இருக்கக்கூடாது. அப்படிபட்ட வாக்காளர்களை நீக்கும் போது தகுதியான நபர்களின் பெயர்கள் விடுபட்டு விடக் கூடாது.
வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று சில கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொண்டால் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வருவதற்கு எங்களுக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை.
இவ்வாறு தம்பிதுரை கூறினார். #ParliamentElection #ElectionCommission #DMDK #ADMK
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றன. இதையடுத்து நாடு முழுவதும் எத்தனை கட்டங்களாக ஓட்டுப்பதிவை நடத்துவது என்று தலைமை தேர்தல் கமிஷன் ஆய்வு செய்து வருகிறது.
இதற்கிடையே பாராளுமன்றத் தேர்தலில் அதிக அளவு பெண்களை பங்கு பெற வைப்பது, கட்சிகள்- வேட்பாளர்களின் தேர்தல் பிரசார செலவை குறைத்து உச்சவரம்பை நிர்ணயம் செய்வது, இடம் பெயர்ந்த தொழிலாளர்களையும் வாக்களிக்க செய்வது உள்பட பல்வேறு விஷயங்களில் சீர்திருத்தங்கள் கொண்டு வர தலைமை தேர்தல் கமி ஷன் திட்டமிட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு இருந்தால்தான் இந்த சீர்திருத்தங்களை அமல்படுத்த முடியும். எனவே அரசியல் கட்சிகளிடம் இதில் ஒருமித்த கருத்தை உருவாக்க தலைமை தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
இதற்காக தேசிய மற்றும் மாநில கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்கு தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகளும், 51 மாநில கட்சிகளும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை 27-ந்தேதி) இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் மொத்தம் 8 விஷயங்கள் குறித்து அரசியல் கட்சிகளுடன் விவாதம் நடத்த தேர்தல் ஆணையர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். அதில் தேர்தலில் பெண்களை அதிக அளவில் பங்கு பெறச் செய்வது பற்றி விவாதிக்கப்பட உள்ளது. பாராளுமன்றத்துக்கு 1952-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது 4.4 சதவீதம் பெண் வேட்பாளர்களே பங்கேற்றனர். அது 2014-ல் 11.9 சதவீதமாக உயர்ந்தது.
2014-ம் ஆண்டு தேர்தலின் போது மொத்தம் களம் இறங்கிய 8251 வேட்பாளர்களில் 668 பேர்தான் பெண்களாக இருந்தனர். 2019-ம் ஆண்டு பாராமன்றத் தேர்தலில் வேட்பாளர்களாக களம் இறக்கப்படும் பெண்கள் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்த வேண்டும் என்று தேர்தல் கமிஷன் விரும்புகிறது. பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2009-ல் 55.82 இருந்தது. 2014-ல் அது 65.54 சதவீதமாக அதிகரித்தது.
பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக உயர்ந்து விட்டதால், அதற்கு ஏற்ப பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கையும் உயர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது.
பெண்களை அதிக அளவில் போட்டியிட செய்ய வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் 58 அரசியல் கட்சிகளிடமும் தேர்தல் ஆணையம் வலியுறுத்த உள்ளது. பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய வேட்பாளர்கள் தேர்வில் இட ஒதுக்கீடு முறையை கொண்டு வரலாமா என்றும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. சுவீடன், அர்ஜெண்டினா, நேபாளம், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ருவாண்டா, பொலிவியா ஆகிய நாடுகளில் பெண் வேட்பாளர்களுக்கு சட்ட ரீதியான இட ஒதுக்கீடு உள்ளது.
அர்ஜெண்டினா, வங்க தேசம், பொலிவியா, மெக்சிகோ, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் பெண்கள் தேர்தலில் போட்டியிட எத்தனை சதவீதம் இடம் வழங்க வேண்டும் என்று தனி சட்டமே உள்ளது. அது போன்று உரிய இட ஒதுக்கீடு முறையை பெண்களுக்காக இந்தியாவிலும் கொண்டு வரலாமா? என்றும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
அடுத்து தேர்தல் செலவை குறைப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளது. கடந்த சில தேர்தல்களில் வேட்பாளர்கள் செய்யும் செலவு பல மடங்கு அதிகரித்து விட்டது. இது தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே கட்சிகளும், வேட்பாளர்களும் தேர்தல் செலவை குறைக்க வேண்டும் என்பதில் தலைமை தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது.
தேர்தலில் செலவு செய்ய அங்கீகரிக்கப்பட்ட தேசிய அரசியல் கட்சிகளுக்கும், மாநில கட்சிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை உச்ச வரம்பாக நிர்ணயிக்க தேர்தல் ஆணையம் விரும்புகிறது. இதன் மூலம் வேட்பாளர்கள் தங்களது கருப்புப் பணத்தை தண்ணீராக செலவு செய்வதில் இருந்து தடுத்து நிறுத்த முடியும் என்று கருதுகிறது.
தபால் ஓட்டு, இ-வோட்டிங் முறைகளை பயன்படுத்தி வேறு ஊர்களில் உள்ளவர்களையும் வாக்களிக்க செய்வது பற்றியும் திங்கட்கிழமை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இடம் பெயர்ந்த தொழிலாளர்களையும் வாக்களிக்க செய்ய 5 நவீன திட்டங்களை தேர்தல் ஆணையம் உருவாக்கி இருக்கிறது. அவை பற்றி ஆலோசனை கூட்டத்தில் விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து வாக்களிக்க வைப்பது, இடம் மாறிய தொழிலாளர்களுக்கு ஹெல்ப்-லைன் உருவாக்கும் திட்டங்களை தேர்தல் ஆணையம் வைத்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகங்களிடமும் தேர்தல் ஆணையம் கருத்து கேட்டுள்ளது.
ஓட்டுப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு மக்கள் மத்தியில் அமைதியான சூழ்நிலையை எப்படி உருவாக்குவது என்பது பற்றியும் கூட்டத்தில் பேசப்பட உள்ளது. கட்சி நிர்வாகிகள் வீடு, வீடாக செல்வதை தவிர்க்க கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் வலியுறுத்த உள்ளது. இது தவிர கடைசி 48 மணி நேரத்தில் நடக்கும் ஆன்லைன் பிரசாரம் பற்றியும் ஆலோசிக்க திட்டமிட்டுள்ளது.
சமூக வலைதளங்களை தேர்தல் பிரசாரத்துக்கு எந்த அளவுக்கு பயன்படுத்தலாம் என்றும் விவாதம் நடத்தப்பட உள்ளது. 2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க. வெற்றிக்கு சமூக வலைதளங்கள் மிகவும் உதவியாக இருந்தன. அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டு வர காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபடி உள்ளன.
எனவே சமூக வலைத்தள பிரசாரத்தை எப்படி கையாள்வது என்று கூட்டத்தில் விவாதிக்க உள்ளனர். தேர்தல் தொடர்பான தகவல்கள் வெளியிட அரசியலமைப்பு பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 126(1) (பி)படி அச்சு ஊடகங்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தெடர்பான தகவல்களை அச்சு ஊடகங்களும் 48 மணி நேரத்துக்கு முன்பே நிறுத்தி விடுவது பற்றியும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதம் நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து அ.தி.மு.க., தி.மு.க. இரு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளன. கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை 2019-ம் ஆண்டு தேர்தலில் அமல்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. #ParliamentElection #ElectionCommission #AllPartyMeeting
சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து பேசினார். அவர் கூறியதாவது:-
காவிரி பிரச்சினை தொடர்பாக நீண்ட நெடுங்காலம் போராடி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்குபடுத்தும் குழுவும் அமைக்கப்பட்டு இருக்கிறது.
அதன் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அது நல்ல முறையில் நடந்து நமக்கு நல்லது கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இதன் மூலம் நமக்கு 14 டி.எம்.சி. தண்ணீர் இழப்புதான். என்றாலும் இந்த தண்ணீராவது நமக்கு நல்ல முறையில் கிடைக்க வேண்டும் என்று விவசாயிகள் விரும்புகிறார்கள்.
காவிரி நீரை நமக்கு தராமல் தடுக்க கர்நாடக முதல்-மந்திரி முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார். இன்று நடைபெறும் முதல் கூட்டத்தில் நமது உரிமைகளை பெரும்வகையில் உறுதியாக இருக்க வேண்டும். அதிக மழை பெய்து வரும் வெள்ளத்தையெல்லாம் நமது பங்கில் அவர்கள் கணக்கு வைத்துவிடக் கூடாது. சுமூகமான முறையில் நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் எதிரான கருத்து இல்லை.
கர்நாடக முதல்-மந்திரி பிரதமரை சந்தித்து விட்டு வந்த பிறகு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசித்து இருக்கிறார். சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப் போவதாக கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த முயற்சி தடுக்கப்பட வேண்டும். எனவே இன்றைய முதல் கூட்டத்தில் நமது கருத்துக்களை சரியான முறையில் எடுத்து வைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக இருப்பதை எடுத்துக் காட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அதில் காவிரி பற்றிய அனைத்து கருத்துக்களையும் பரிமாறிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
காவிரி ஆணையம் தொடர்பாக குழு அமைப்பது பற்றியும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதிகள் இடம் பெறுவது குறித்தும் விளக்கமாக சொன்னது. காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி பிரதிநிதிகள் உடனே நியமிக்கப்பட்டனர். கர்நாடக அரசும் குழு உறுப்பினர்களை நியமித்துள்ளது. இன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் நடைபெறுகிறது. இதில் நமது தரப்பில் என்னென்ன அம்சங்கள் இடம் பெற வேண்டும் என்பதை நமது பிரதிநிதிகளுக்கு சொல்லி இருக்கிறோம். மூத்த அமைச்சர்கள், அரசு வழக்கறிஞர்கள், அதிகாரிகள் ஆகியோருடன் கலந்து பேசி அவர்கள் செயல்பட வேண்டிய முறைகளை தெரிவித்து இருக்கிறோம்.
முதல் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு பிறகு இப்போது கூடி இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப் படி நமக்கு 177.25 டி.எம்.சி. நீர் வழங்கப்பட வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டு விட்டது. 10 நாட்களுக்கு ஒருமுறை நீர் ஒழுங்காற்று குழு கூடி நமக்கு தர வேண்டிய தண்ணீர் அளவை நிர்ணயிப்பார்கள்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்திற்கு பிறகு அது செயல்படும் விதம் நமக்கு தெரிய வரும். அதன் பிறகு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி நாம் தக்க முடிவை எடுப்போம்.
இவ்வாறு பழனிசாமி பேசினார். #CauveryManagementAuthority #EdappadiPalaniswami
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
டெல்டா மாவட்டங்களில் கடந்த 7 ஆண்டுகளாக போதிய தண்ணீர் காவிரியில் வராததால் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படவில்லை. இதே ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சம்பா மற்றும் தாளடி சாகுபடிகளும் பல நேரங்களில் வறட்சியினால் பாதிக்கப்பட்டு மிகுந்த நாசத்திற்கும், நஷ்டத்திற்கும் டெல்டா மாவட்ட மக்கள் ஆளாகியுள்ளார்கள்.
வழக்கம்போல் இந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுமா என பெரும் கேள்வி எழுந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நாங்கள் நடத்திய சட்டப் போராட்டத்தின் மூலம் ஆணையத்தை பெற்றுவிட்டோம் எனக் கூறி தமிழக மக்களை ஏமாற்றுவதை கைவிட்டு, உடனடியாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீரை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதோடு தேவையானால் இதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தையும் கூட்ட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வற்புறுத்தி தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #tamilnews
சென்னை:
காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் கடந்த 17-ந்தேதி நடைபெறும் என்று எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
ஆனால் அன்று காவிரி பிரச்சினை குறித்து வழக்கு விசாரணை நடந்ததால் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாகவும் கூட்டம் நடை பெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் வருகிற 22-ந்தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடை பெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைசிறுத்தை கட்சி தலைவர்திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு தலைவர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். #MKStalin #Cauveryissue
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்